ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சட்டத்தின்படி, ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்படுவதோடு, உரிமங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போராட்டங்களின் போது முகத்தை மறைப்பதைத் தடை செய்யவும், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் போராட்டங்களை நடத்தக் கட்டுப்பாடு விதிக்கவும் பொலிஸாருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை யூத அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், இது கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நசுக்கும் செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் துப்பாக்கி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.





