Newsபிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

-

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது.

இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும் ‘Puppy Farming’ முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளதுடன், நாய்களுக்கான மின்சார அதிர்வு கழுத்துப்பட்டை (Electric Shock Collars) பயன்பாட்டைத் தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், நரி வேட்டைக்கான போர்வையாகப் பயன்படுத்தப்படும் ‘Trail Hunting’ முறைக்கும், வனவிலங்குகளைக் காயப்படுத்தும் பொறி நுட்பங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

விவசாயத் துறையில் கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்ப்பதைத் தவிர்க்கவும், மீன்களுக்கான மனிதாபிமான இறைச்சி உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்தவும் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை விலங்குகள் நல அமைப்புகள் வரவேற்றுள்ள போதிலும், இது கிராமப்புற கலாசாரத்தின் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

Bondi துப்பாக்கிதாரிகள் குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர் – காவல்துறை

ஹனுக்காவைக் கொண்டாடும் யூதக் கூட்டத்தின் மீது Bondi துப்பாக்கிதாரிகள் பல துண்டுக் குண்டுகளை வீசியது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவை செயல்படுத்தத் தவறியதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Boxing Day போட்டிக்கு பலத்த பாதுகாப்பு

Bondi-இல் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெறும் Boxing Day Test போட்டிக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்க விக்டோரியா காவல்துறை...