அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், தாங்களாக முன்வந்து வெளியேறினால் 3000 டொலரும் தாய் நாட்டுக்குச் செல்ல இலவச விமான டிக்கெட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்காக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை உருவாக்கியுள்ள செயலியில், இந்தாண்டு இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.





