சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 9 மணியளவில் வடக்கு Rydeல் உள்ள Lane Cove சாலை மற்றும் Epping சாலையின் மூலையில் ஒரு பேருந்தும் ஒரு காரும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது, பின்னர் பேருந்து மருத்துவ மையத்தின் மீது மோதியது.
பேருந்தில் இருந்த ஏழு பயணிகள், பேருந்து ஓட்டுநர் மற்றும் காரில் இருந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்திற்குள் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 30 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், யாரும் சிக்கிக்கொள்ளவில்லை என்றும் தீயணைப்பு சேவை உறுதிப்படுத்தியது.
காயமடைந்த மூவரும் தற்போது Royal North Shore மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.





