இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தி 357 சந்தேக நபர்களை கைது செய்ததாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
துருக்கியின் வடமேற்கு மாகாணமான யலோவாவில் 6 IS போராளிகள் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மறைவிடமாக செயற்பட்ட வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டதாகவும் இதன்போது 08 அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IS போராளிக் குழுவினர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து துருக்கி முழுவதும் தொடர் சோதனை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன.





