அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தற்போது நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (DEA) ஒரு நடைபாதையில் மதுரோ கைவிலங்குகளுடன் அழைத்துச் செல்லப்படுவதைக் காட்டும் வீடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
“Perp Walked” என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், அமெரிக்க அதிகாரிகளுடன் மதுரோ ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதைக் காணலாம்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் இராணுவ நடவடிக்கைக்கான செலவுகளை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும் என்றும், நிலையான அரசாங்கம் நிறுவப்படும் வரை வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் கூறினார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய அரசாங்கமும் இந்த சம்பவத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
சர்வதேச சட்டத்தை மதித்து, வெனிசுலாவில் ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.





