ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக இருந்தது. 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
2019/20 ஆம் ஆண்டின் Black Summer தீ பருவத்திற்குப் பிறகு பதிவான மிக மோசமான வெப்ப அலை இது என்று வானிலை துறைகள் குறிப்பிடுகின்றன.
இதன் விளைவாக, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களுக்கு கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மெல்பேர்ண் மற்றும் அடிலெய்டில் இன்று வெப்பநிலை 41 மற்றும் 42 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிட்னியில் வெப்பநிலை சனிக்கிழமை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கடுமையான வெப்பத்தில், நீர்ச்சத்து குறைபாட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேவையற்ற முறையில் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் ஏற்கனவே விழிப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.





