பெர்த்தின் மேற்கு புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
Wembley-இல் உள்ள Pangbourne தெருவுக்கு அருகிலுள்ள Grantham தெருவில் இரவு 10.50 மணியளவில் கிழக்கு நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மேற்கு நோக்கி பயணித்த மற்றொன்றும் மோதிக்கொண்டதாகவும், மோதலின் தருணத்தை சிசிடிவி படம்பிடித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஓட்டுநர்களில் ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இரண்டாவது ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிறிது நேரத்தில் இறந்தார்.
விபத்து குறித்து விசாரணை நடத்தும் போலீசார், சாட்சிகள், டேஷ்கேம் மற்றும் சிசிடிவி ஆகியவற்றைத் தேடி வருகின்றனர்.





