விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு VicEmergency அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக Fairhaven-இல் இருந்து ஸ்கீன்ஸ் க்ரீக் வரையிலான Great Ocean சாலை மூடப்பட்டுள்ளது.
Cumberland ஆற்றின் வேகமாகப் பாய்ந்த நீர் கார்கள், கூடாரங்கள் மற்றும் முகாம் உபகரணங்களை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது, மேலும் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளில் சில மணி நேரத்தில் 166 மிமீ மழை பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகளுக்காக போலீஸ் ஹெலிகாப்டர்கள் மற்றும் SES குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் நிலச்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை மத்திய, மேற்கு மற்றும் தெற்கு கிப்ஸ்லேண்டிற்கு கனமழை பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வெள்ளத்தைத் தவிர்க்கவும், பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லவும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.





