பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இந்தியில் மொழியில் தேரே இஷ்க் திரைப்படம், அதனை தொடர்ந்து, Wales International தயாரிப்பில், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் கர படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
மாறுபட்ட கதைக்களத்தில், ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளதுடன், தனுஷ் அடுத்தடுத்து படங்களை கைவசத்தில் வைத்துள்ளார்.
இந்த நிலையில், தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மிருணாள் தாகூர், இதுவரை எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இருவருக்கிடையே கிசு கிசுக்கள் மட்டும் உலா வருகிறன.
‘சன் ஆஃப் சர்தார் 2’ பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டதும், அங்கு இருவரும் நெருக்கமாகப் பேசிப் பழகிய வீடியோக்களே இந்த வதந்திகள் பரவ முக்கியக் காரணமாக அமைந்ததாக இந்தியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள மிருணாள், “தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவர் அந்த விழாவிற்கு அஜய் தேவ்கனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். மற்றபடி எங்களைப் பற்றி வரும் செய்திகளில் உண்மை இல்லை” அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் ஏற்கனவே ரஜினி காந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து, 18 ஆண்டுகள் கழித்து விவாரகத்து செய்துக் கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில், தனுஷ் மிருணா தாகூரை 2ஆவதாக திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





