Newsஇந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்

-

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் 1:17 அளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இந்த விமானம் இழந்தது.

குறித்த விமானத்தில் 8 ஊழியர்களும் 3 பயணிகளும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

மகாசர் விமான நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லியாங்-லியாங் மலைப்பகுதியில் விமானம் மாயமாகியுள்ளது.

இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் மற்றும் பொலிஸார் இணைந்து மாயமான விமானத்தைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, விமானம் மாயமானதாகக் கூறப்படும் மலைப்பகுதிகளில் இருந்து கரும்புகை எழும்புவது, விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...