நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில் உள்ள ஒரு முகாம் தளத்தில் நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
வடக்கு தீவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள Mount Maunganui என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், குப்பைகள் மற்றும் பாறைகள் கீழே உள்ள முகாம் தளத்தில் மோதியதால், campervans மற்றும் பிற வாகனங்கள் முகாம் தளத்தில் புதைந்தன.
குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் இன்னும் காணவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களில் பள்ளி விடுமுறைக்காக முகாம் தளத்திற்கு வந்த குடும்பங்களும் அடங்குவர் என்றும் நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் மிகவும் கடினமாக இருப்பதாகவும், மீட்புக் குழுக்கள் நேற்று இரவு முழுவதும் பணியாற்றி வந்தாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அப்பகுதியின் மேயர் Mahe Drysdale கூறுகிறார்.
நிலச்சரிவுக்குப் பிறகு அந்தப் பகுதி மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
காணாமல் போனவர்களில் யாராவது பாதுகாப்பாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டார்களா என்று போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.





