ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு கொண்டாட்டத்தை குறிவைத்து தாக்குதலைத் திட்டமிட்டவர் Sepehr Saryazdi என்று போலீசார் கூறுகின்றனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், தாக்குதலுக்காக அவர் மது பாட்டில்கள், போர்வை காகிதம் மற்றும் போர்வைகளை வாங்கியதையும், ஜனவரி 26 அன்று கோல்ட் கோஸ்டில் “ஆஸ்திரேலிய தின கலவரங்களுக்கு” தலைமை தாங்குவதாக சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டதையும் காட்டியது.
அரசாங்கம் “ஒரு கொடூரமான திருப்பத்தை எடுத்து வருகிறது” என்றும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசாங்க அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் சமூக ஊடகங்களில் கூறியுள்ளார் .
பயங்கரவாதச் செயலைத் தயாரித்ததாக அல்லது திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சர்யாஸ்டி, நேற்று பிரிஸ்பேர்ண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார்.
அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, பெப்ரவரி 20 ஆம் திகதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Saryazdi சிட்னி பல்கலைக்கழகத்தில் கணித அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.





