Newsஅமெரிக்காவில் பனிப்புயல் - 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

-

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பனிப்புயல் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெக்சாஸ், ஓக்லஹோமா, கன்சாஸ் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் (23) பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. டகோடாஸ், மின்னெசோடா ஆகிய இடங்களில் குளிர்காற்றின் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் சென்றதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்காளாகினர்.

லூயிசியானா, மிசிசிப்பி, டென்னிசி ஆகிய இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்திருப்பதால், மரங்கள், மின்சார கம்பிகள், கோபுரங்கள், வீதிகளில் சுமார் 1 இன்ச் அடர்த்திக்கு பனி படர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் பல இடங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

மருந்துகள் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்

இந்த ஆஸ்திரேலிய தின நீண்ட வார இறுதியில் நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீச உள்ளது, மேலும் சில பொதுவான மருந்துகள் அதிக உடல்...