விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள் இன்னும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இல்லை என்று தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர்.
Gellibrand, Barongarook மற்றும் Kawarren உள்ளிட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்ட அவசர எச்சரிக்கைகள் “Watch and Act” நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த காட்டுத் தீ காரணமாக 16க்கும் மேற்பட்ட வீடுகளும் 11,000 ஹெக்டேர் நிலமும் ஏற்கனவே எரிந்து நாசமாகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை, விக்டோரியாவில் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பமான நாள் 48.9 டிகிரி செல்சியஸை எட்டியது.
தெற்குப் பகுதிகளில் வெப்பநிலை சற்று குறைந்திருந்தாலும், வடக்கு விக்டோரியாவில் இன்னும் அதிக வெப்பமான வானிலை நிலவுகிறது.
இதற்கிடையில், VicEmergency செயலி மூலம் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் தகவல்களுக்கு கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.





