நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த கல்கி திரைப்படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில், படத்தில் இருந்து சில காரணங்களுக்காக தீபிகா படுகோன் வெளியேற்றப்பட்டார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தீபிகா படுகோன் நடித்த சுமதி கதாபாத்திரத்தில் நடிக்க ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, ராஷ்மிகா என பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது சாய் பல்லவி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரியவந்துள்ளது.





