பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .
பக்கனத்தில் Bulk Foods கடையை நடத்தி வரும் Rebekah Becsi, கடந்த ஆண்டு பெப்ரவரியில் சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டதிலிருந்து தனது வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து விற்பனை 80 சதவீதம் குறைந்துள்ளதாகவும், வாடகை செலுத்துவது கடினமாகிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த சாலை மேம்பாட்டுத் திட்டம் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படவிருந்த போதிலும், Big Build Roads இப்போது 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை ஆகும் என்று கூறுகிறது.
சாலைகள் மூடப்பட்டதால், வாடிக்கையாளர்கள் கடைகளை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் வேறு இடங்களுக்குச் சென்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள பல வணிகங்களும் இந்த நெருக்கடியை எதிர்கொள்கின்றன. மேலும் Cardinia Shire கவுன்சில் இந்த திட்டம் தங்கள் நேரடி நிர்வாகத்தின் கீழ் இல்லை என்றும், வணிகங்களின் கவலைகள் குறித்து மாநில அரசாங்கத்திற்கு தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் கூறுகிறது.
Bulk Foods கடையின் உரிமையாளர், வணிக உரிமையாளர்களுக்கு இழப்பீடு, நிதி உதவி அல்லது குறைந்த வட்டியில் கடன்கள் கோரி Change.org இல் ஒரு மனுவைத் தொடங்கியுள்ளார். மேலும் அது 800 க்கும் மேற்பட்ட கையொப்பங்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், விக்டோரியன் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தைத் தொடங்க, ஒரு மனுவிற்கு 2,000 கையொப்பங்களும், ஒரு மின்-மனுவிற்கு 10,000 கையொப்பங்களும் தேவை.





