ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில் உள்ள St Bede’s கல்லூரியின் முன் ஆஸ்திரேலிய தேசியக் கொடி மற்றும் கல்லூரிக் கொடிகள் இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.
27 வயதான ஸ்கையர் Michael Hurst, பெப்ரவரி 2 ஆம் திகதி ஜப்பானில் உள்ள மவுண்ட் Niseko-இல் பனிச்சறுக்கு விளையாடும்போது திடீரென இறந்தார்.
திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.
அவர் இறக்கும் போது, அவர் தனது சில நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.





