Newsபாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு - 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

-

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு வந்த நபர் ஒருவர் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைய முயன்றுள்ளார்.

அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தினால் அங்கிருந்தவர்கள் வாசல் அருகே அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதோடு 169 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தெஹ்ரிக் – இ தலிபான் இயக்கத்துடன் தொடர்புடைய பிட்னா அல் – குவாராஜி அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...