டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமாரை சந்தித்துள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘மங்காத்தா’ படம் கடந்த 23ஆம் திகதி ரீ -ரிலீஸானது.
இப்படம் ரீ- ரிலீஸில் இந்திய மதிப்பில் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.





