விக்டோரியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், விவசாயம் சார்ந்த பல இடங்களான விளைநிலங்கள், வயல்வெளிகள் நீரில் மூழ்கியதால், பயிர்கள் நஷ்டம் ஏற்பட்டு, வரத்து குறைந்துள்ளது.
இதனால் தானியங்கள், பழங்கள், மரக்கறிகள் என பல பொருட்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து தேசிய விநியோகத்திற்கு கணிசமான அளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கப்படுவதே இதற்குக் காரணம்.
மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.