Newsகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

-

கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டார்ஹாம் பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ தமிழ் வட்டாரங்களின் தகவலின் படி உயிரிழந்தவர் அருண் விக்னேஸ்வரராஜா என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

இவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்றும் தமிழ்த் தேசிய விளையாட்டு அணிகளில் துடிப்புடன் பங்குபற்றி வந்தவர் எனவும் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அஜாக்ஸ் (Ajax) என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்கஸ்ரில் அருந்தகத்துக்கு (King’s Castle Bar and Grill) வெளியே வாகனத் தரிப்பிடத்தில் இருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பிவிட்டார் என்றும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரெறென்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருண் விக்னேஸ்வரராஜா அங்கு பின்னர் உயிரிழந்தார். அவரை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைப் பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை.

கத்தி வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற அதேநேரத்தில் அருந்தகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் சாரதி ஒருவர் தனது காரை வேகமாகச் செலுத்தி நபர் ஒருவரை மோதிப்படுகாயப்படுத்தியுள்ளார்.

அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். படுகாயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டுவருவதாக

டார்ஹாம் பிராந்தியப் பொலிஸ் தெரிவித்துள்ளது. சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...