Newsஆஸ்திரேலியாவில் இணைய வசதி இல்லாமல் 28 லட்சம் மக்கள்

ஆஸ்திரேலியாவில் இணைய வசதி இல்லாமல் 28 லட்சம் மக்கள்

-

ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் பேருக்கு இன்னும் இணைய வசதி இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொத்த மக்கள் தொகையான 25 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 28 லட்சம் பேருக்கு இணைய வசதி இல்லை அல்லது இணையத்தை எப்படி பயன்படுத்துவது என்று புரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் தொலைதூர அல்லது பிராந்திய பகுதிகளில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இணைய வங்கிச் சேவை போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள், காட்டுத் தீ அல்லது பேரிடர் காலங்களில் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இணைய வசதியின் பற்றாக்குறையும் ஒன்றாகும்.

வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைன் மூலம் இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தாங்கள் மேலும் சிக்கலுக்குள்ளாக நேரிடும் என தொலைதூர பிரதேசங்களில் உள்ள ஆஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...