சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா செல்வதற்காக உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த 43 பேரும் யாழ் மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், அவர்களில் 33 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு மாத காலமாக வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்த இக்குழுவினர் ஐந்து நாட்கள் சுற்றுலா செல்வதாக கூறி நேற்று வவுனியாவில் இருந்து காலி உனவட்டுன வரை பஸ்சில் சென்று ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நன்றி – தமிழன்