Newsசிட்னியில் கைதான தனுஷ்க குணதிலக்க - இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

சிட்னியில் கைதான தனுஷ்க குணதிலக்க – இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

-

ஆஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இன்று அவர் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி, சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணொருவரையே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பாலியல் குற்றப்பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளைப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும், தனுஷ்க குணதிலக்க மீதுான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயினும், அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...