Newsஆஸ்திரேலியா சென்ற மற்றுமொரு இலங்கை அணி வீரரின் மோசமான செயல்?

ஆஸ்திரேலியா சென்ற மற்றுமொரு இலங்கை அணி வீரரின் மோசமான செயல்?

-

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சாமிக்க கருணாரத்ன, இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த போது, ​​சிட்னியில் உள்ள கெசினோ ஒன்றில் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாமிக்க கருணாரத்ன அங்குள்ள மற்றுமொருவரைத் தாக்கியதாக இலங்கை தொலைகாட்சியில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அணி தலைவரான தசுன் ஷானக்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரால் மோதல் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற அணிக்கு கிட்டத்தட்ட இருபது விருந்துகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவற்றில் 6 விருந்துகளுக்கு மட்டுமே நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றனர். ஆனால் சில வீரர்கள் மேலாளரை தவறாக வழிநடத்தி வரம்பை மீறி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறிப்பிட்டுள்ள நேரத்தை விடவும் பல மணித்தியாலங்கள் தாமதமாகவே வீரர்கள் அறைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

நியூ சவுத் வேல்ஸில் தங்கையை கத்தியால் குத்திய சகோதரி

10 வயது சிறுமி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி, 17 வயதுடைய சந்தேகநபர்...

$1.3 பில்லியன் லாட்டரியை வென்றார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடியேறியவர் அமெரிக்காவில் $1.3 பில்லியன் பவர்பால் லாட்டரியை வென்றுள்ளார். லாவோஸில் இருந்து குடியேறியவர், எட்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வருகிறார், கடந்த வாரம்...

ஆஸ்திரேலியாவில் ஜூன் 2 முதல் தொடங்கும் புதிய விசா திட்டம்

ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa பதிவு ஜூன் 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பசிபிக் தீவுகள் மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளைச் சேர்ந்த...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையில் நியூ சவுத் வேல்ஸிற்கு முதலிடம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. NRMA தரவுகளின்படி, கடந்த சில மாதங்களில் நியூ சவுத்...

தெருவை சுத்தம் செய்வதை நிறுத்தியுள்ள மெல்போர்ன் கவுன்சில்

மெல்போர்ன் கவுன்சில் சாலைகளை சுத்தம் செய்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெல்போர்னின் யர்ரா நகர மக்கள் கூறுகையில், அப்பகுதியின் சாலைகளை யார் பராமரிக்க வேண்டும் என்பதில் கவுன்சிலுக்கும்...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையில் நியூ சவுத் வேல்ஸிற்கு முதலிடம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. NRMA தரவுகளின்படி, கடந்த சில மாதங்களில் நியூ சவுத்...