ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2022/23 ஆம் ஆண்டிற்கான குடியேற்ற ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்திய போதிலும், திறமையான விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு வெளிநாட்டினர் விண்ணப்பிப்பதில் பற்றாக்குறை இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டிற்கு செல்வதற்காக பெறப்படும் மாணவர் வீசா மற்றும் சுற்றுலா விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
விருந்தோம்பல் – தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவினாலும், உரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, மத்திய அரசு எதிர்பார்த்தபடி பணியாளர் பற்றாக்குறைக்கு முடிவு கட்டுவது அடுத்த ஆண்டில் நடக்காது என கணிக்கப்பட்டுள்ளது.