News16 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிஷ்டம்

16 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிஷ்டம்

-

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ லேக்கீ தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதனை சமன் செய்வதற்காக டென்மார்க் அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து டென்மார்க் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது.

உலகக்கிண்ண தொடரில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றிலிருந்து ஆஸி. இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் Coffee & Beer-இன் விலைகள் உயரும் அபாயம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் பல உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரிக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோப்பை coffeeயின்...

புதிய சீன வைரஸ் பற்றி தெரியவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்

சமூக ஊடகங்கள் மூலம் சீனா முழுவதும் மீண்டும் கடுமையான வைரஸ் பரவி வரும் போதிலும், உலக சுகாதார அமைப்போ, சீன அரசோ இதுவரை அப்படியொரு நிலை...

NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் இருந்து இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் நம்புக்கா ஹெட்ஸிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தென்கிழக்கே...

வயதுக்கு ஏற்ப மாறும் ஆஸ்திரேலியர்களின் கணக்கு இருப்பு

ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள...