Newsஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு - விளையாட்டு அமைச்சு அறிவிப்பு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு – விளையாட்டு அமைச்சு அறிவிப்பு!

-

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பு விளையாட்டு அமைச்சினால் உருவாக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பை உருவாக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக்கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முன்னிலையான மேலதிக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மொஹமட் லாஃபர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப குழுவொன்றின் ஆலோசனை பெறப்படும் என மேலதிக சொலிசிட்டர் தெரிவித்தார்.

புதிய கிரிக்கெட் யாப்பை உருவாக்குவதுடன், கிரிக்கெட் சட்டம் மற்றும் அது தொடர்பான கிரிக்கெட் ஒழுங்குவிதிகளும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலதிக சொலிசிட்டர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

Latest news

700 பில்லியன் டொலரைத் தாண்டிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு

Tesla நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது. SpaceX, Starlink, Tesla நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து...

விக்டோரியாவில் உயரவுள்ள பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள்

மாநில அரசு அமைதியாக புதிய கட்டண உயர்வை அறிவித்த பிறகு, விக்டோரியர்கள் பொதுப் போக்குவரத்தில் ஆண்டுக்கு $104 வரை கூடுதலாகச் செலுத்துவார்கள் என தெரியவந்துள்ளது. ஜனவரி 1...

குயின்ஸ்லாந்தின் சாலைகளில் திகில் – மூவர் பலி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் நேற்று நடந்த மூன்று தனித்தனி கார் விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே நடந்த ஒரு சம்பவத்தில், பாலத்தில் இருந்து விலகி ஆற்றில்...

Bondi தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் தீபங்கள் ஏற்றி அஞ்சலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை Bondi கடற்கரைப் பகுதியில் 15 பேர் கொல்லப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. அதற்காக, நேற்று ஆஸ்திரேலியா முழுவதும்...

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவர் விண்வெளியில் முதன்முதலில் நுழைந்தார். அதுதான் 33 வயதான ஜெர்மன் பொறியாளர்...

வெளியாகப்போகும் 3 இடியட்ஸ் படத்தின் அடுத்த பாகம்

பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கான், கரீனா கபூர், மாதவன் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி...