Breaking Newsஇலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த இயந்திரப்படகு - கடற்படையினர் சுற்றிவழைப்பு!

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த இயந்திரப்படகு – கடற்படையினர் சுற்றிவழைப்பு!

-

திருகோணமலையில்  இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று திங்கட்கிழமை (5) அதிகாலையில் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய இன்று அதிகாலை 3 மணியளவில் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு ஒன்று பிரயாணித்த போது  அதனை கடற்படையினர் சுற்றிவழைத்து சோதனையிட்டனர்.

அப்போது அதில் ஒரு பெண் உட்பட 20 பேர் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்துள்ளமை கண்டதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை  திருகோணமலை கடற்பட முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், இவர்கள் களுவாஞ்சிக்குடி நாகர்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்  இவர்களை விசாரணையின் பின்னர் திருகோணமலை தலைமை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

Latest news

பல மின்னணுப் பொருட்கள் மீதான புதிய வரிகளை நீக்கிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் மீது விதிக்கப்பட்ட புதிய வரிக் கொள்கையை நீக்கியுள்ளார். அதன்படி, ஸ்மார்ட்போன்கள், கணினிகள், மானிட்டர்கள், மெமரி கார்டுகள், பயண...

மாடு மோதியதில் உயிரிழந்த விக்டோரியா மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

விக்டோரியாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று பசு மாடு மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை பெனால்லாவில் உள்ள மோகோன் சாலையில் அவர் ஒரு விபத்தில் சிக்கினார்...

முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு பிரதமர் வழங்கவுள்ள சிறப்பு வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக வீடு வாங்கும் ஒவ்வொருவருக்கும் 5% வைப்புத்தொகையுடன் வீடு வாங்கும் வாய்ப்பை வழங்குவதாக மத்திய அரசு உறுதியளிக்கிறது. வீட்டுவசதி நெருக்கடியைச் சமாளிக்கும் திட்டத்தின் ஒரு...

உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா

சீனாவில் ஹியாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம் வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இது ஒரு பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே இரண்டு மைல்கள் நீளமுள்ள கட்டமைப்பாகும்....

Bondi Junction தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு வருடம்

சிட்னியில் பரபரப்பான ஒரு வணிக வளாகத்தில் நாட்டையே உலுக்கிய சோகம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகிறது. ஏப்ரல் 13, 2024 அன்று, ஜோயல் கௌச்சி ஒரு கொடூரமான...

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தட்டம்மை வழக்குகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு புதிய தட்டம்மை வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் சுகாதார அதிகாரிகள் புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இந்த மிகவும் தொற்றும் நோயின் பரவல் தொடர்ந்து...