இந்த கிறிஸ்துமஸ் சீசனில் சுமார் 22 லட்சம் பயணிகள் சிட்னி விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12 முதல் ஜனவரி 6 வரையிலான காலகட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 03 வருடங்களின் பின்னர் இந்த வருடம் மிகவும் பரபரப்பான கிறிஸ்துமஸ் விடுமுறை காலமாக இருக்கும் என சிட்னி விமான நிலைய அதிகாரிகள் கணித்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் சுமார் 19 இலட்சம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் ஈடுபடுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோய் பரவத் தொடங்கிய 2019 டிசம்பரில் இருந்து இது 91 சதவீதம் அதிகமாகும். சர்வதேச விமானப் பயணிகளின் வளர்ச்சி 71 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு விமானத்திற்கு 02 மணி நேரத்திற்கு முன்னதாகவும், சர்வதேச விமானத்திற்கு 03 மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்தை வந்தடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.