Newsஆஸ்திரேலியா வந்த நபரின் விசா ரத்து - பயணப்பொதியில் ஆறு கிலோ...

ஆஸ்திரேலியா வந்த நபரின் விசா ரத்து – பயணப்பொதியில் ஆறு கிலோ இறைச்சி!

-

தனது பயணப்பொதியில் ஆறு கிலோகிராம் இறைச்சியுடன் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட ஒரு நபரின் விசா ரத்து செய்யப்பட்டு அவருக்கு $2,664 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Foot and Mouth நோய்ப்பரவலைத் தடுப்பதற்கென கடுமையான சட்டங்களை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தியுள்ள பின்னணியில், 6 கிலோ இறைச்சியுடன் வந்த பயணி ஒருவரது விசா ரத்துச் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பெர்த் விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரின் பயணப்பைகளை ஆஸ்திரேலிய biosecurity அதிகாரிகள் சோதனையிட்டபோது, 3.1 கிலோ வாத்து இறைச்சி, 1.4 கிலோ மாட்டிறைச்சி rendang, 500 கிராமுக்கு மேல் frozen மாட்டிறைச்சி மற்றும் கிட்டத்தட்ட 900 கிராம் கோழி இறைச்சி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த நபர் தனது incoming passenger அட்டையில் இறைச்சி அல்லது பிற உணவு எதையும் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வரவில்லை என குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் அந்த நபரின் விசாவை ரத்து செய்ததாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார். மேலும் அவருக்கு $2,664 அபராதம் விதிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் விவசாயத் துறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய foot and mouth நோய்ப்பரவலைத் தடுக்கும்வகையில், ஆஸ்திரேலியாவிற்குள் இறைச்சி உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டுவருவதற்கான தடை அண்மையில் விதிக்கப்பட்டது.

குறித்த பயணியிடம் காணப்பட்ட இறைச்சி வகைகள், foot and mouth நோய் அபாயத்தையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலையும் கொண்டுவரும் அபாயத்தை உட்படுத்தியது என குறிப்பிடப்படுகிறது.

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...