Breaking NewsTwitter-ன் பாதுகாப்பு குழு கலைப்பு - Elon Musk எடுத்த அதிரடி...

Twitter-ன் பாதுகாப்பு குழு கலைப்பு – Elon Musk எடுத்த அதிரடி முடிவுகள்

-

ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட சிவில், மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த குழு நேற்று முன்தினம் இரவு ட்விட்டர் பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குழு கலைக்கப்படுவதாக மின்னஞ்சல் மூலம் ட்விட்டர் அந்த குழுவுக்கு தெரியப்படுத்தியது.

பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “ட்விட்டரை பாதுகாப்பான தகவல் தரும் இடமாக மாற்றுவதற்கான எங்கள் பணி முன்னெப்போதையும் விட வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் நகரும். மேலும் இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த உங்கள் யோசனைகளை நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்” என கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைத் தடுக்க Jetstar-இன் புதிய திட்டம்

விமான தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதன் அனைத்து விமானங்களையும் அதற்கேற்ப புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக...

ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2025 கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்றாகும் (7 ஏப்ரல்). 18 வயதை பூர்த்தி செய்த தகுதியுள்ள ஆஸ்திரேலியர்கள் இன்று (07) இரவு...

இனி ஆஸ்திரேலியர்களுக்கு $4,000 சேமிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு

மலிவு விலையில் சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்தை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று (06) அறிவித்தார். மே 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர்...