Breaking Newsகோவிட் தொற்று மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கோவிட் தொற்று மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

-

வரும் நாட்களில் கோவிட் தொற்று மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், கடந்த வாரத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே.

இதற்கிடையில், குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை, கோவிட் அறிகுறிகளைக் கொண்ட எவரும் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்நிலையைப் பார்க்க முதியோர் பராமரிப்பு மையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

காரணம், மாநிலத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருந்து 14,941 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய வாரத்தில் 15 கோவிட் இறப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தாலும், கடந்த வாரத்தில் அது 33 ஆக அதிகரித்துள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் முதியோர் பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

பாசிகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு $100,000 வரை மானியம்

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கடற்கரையோரப் பகுதிகளில் நீடிக்கும் நச்சுப் பாசிப் பூக்களால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு புதிய கட்ட நிதி உதவியை அறிவித்துள்ளது. உள்ளூர் வணிகங்களில் இந்த நச்சுப்...

கைகுலுக்கலுடன் முடிவுக்கு வந்த தாய்லாந்து-கம்போடிய மோதல்

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். ஆசிய பிராந்தியக்...

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...