ஆஸ்திரேலியர்களில் 3/4 பேர் அல்லது சுமார் 15 மில்லியன் பேர் இந்த ஆண்டு பல்வேறு மோசடியான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை (Scam) பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
எனினும் அவர்களில் 1/5 பேர் மாத்திரமே முறையாக முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் இவ்வாறான மோசடிகளில் சிக்கி அவுஸ்திரேலியர்கள் இழந்த தொகை சுமார் 02 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் அது 04 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தற்போது வாட்ஸ்அப் மூலம் மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.