News2022 இல் ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் யார்?

2022 இல் ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் யார்?

-

2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் Australian Financial Review கணக்கெடுப்பின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பட்டியலின்படி, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய பிரதமருமான அல்பனீஸ் 9வது இடத்திலேயே நீடித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவரது புகழ் வேகமாக அதிகரித்ததே இதற்குக் காரணம்.

இம்முறை முதல் 10 இடங்களில் மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் 02வது இடத்திலும், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் 03வது இடத்திலும் உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் 05வது இடத்திலும், பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிலிப் லோவ் 07வது இடத்திலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் 10வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் – மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து பிரதமர்கள் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை.

Latest news

ஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு...

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

24 மணி நேர McDonald’s-ஐ எதிர்க்கும் மெல்பேர்ண் கவுன்சில்

மெல்பேர்ண், நார்த்கோட்டில் உள்ள High Street-இல் 24 மணி நேரமும் இயங்கும் புதிய McDonald’s உணவகத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டமிடல் விண்ணப்பத்திற்கு எதிராக...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...