Breaking Newsநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை – மருத்துவமனை ஊழியர் வெளியிட்ட...

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை – மருத்துவமனை ஊழியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

-

இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கூப்பர் மருத்துவமனை யில் அவரது உடல் கூராய்வு செய்யப்பட்டபோது உடனிருந்ததாக கூறப்படும் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்கள் சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன.

கூப்பர் மருத்துவமனையின் பிணவறை ஊழியர் எனக் கூறும் ரூப்குமார் ஷா என்பவர் வழங்கியுள்ள ஒரு பேட்டியில், “சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைப் பார்த்தபோது அது (எனக்கு) தற்கொலையாகத் தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் இருந்தன. நான் என் உயர் அதிகாரியிடம் பேசினேன். ஆனால் அவர் அதைப் பற்றி பின்னர் விவாதிப்போம் என்று கூறினார்.

உடல் கூராய்வு அறிக்கையில் என்ன எழுத வேண்டும் என்பது மருத்துவரின் வேலை. சுஷாந்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை அவரது புகைப்படத்தைப் பார்த்தாலே அனைவரும் சொல்லலாம். விசாரணை முகமைகள் என்னை அழைத்தாலும் அவர்களிடமும் இதை சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார்

திரை வாழ்க்கையின் வெற்றிப்பயணத்தை தொடங்கி சிறிது காலமே ஆகியிருந்த சுஷாந்த், 2020, ஜூன் மாதம் பதினான்காம் தேதி உயிரிழந்தார்.

அவரது உடல் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன்படி, சுஷாந்த் மரணம் தற்கொலை தான் எனவும் கொலைக்கான எந்த தடயமும் இல்லை எனவும் கூறப்பட்டது.

2020, ஜூலை 25 அன்று, பாட்னாவில் சுஷாந்தின் குடும்பத்தினர் அவரது இறப்பு தொடர்பாக சந்தேகம் இருப்பதாகப் புகாரளிக்க, இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு, ஒகஸ்ட் மாதத்தில் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க அனுமதியளித்தது உச்சநீதிமன்றம்.

இந்த சிபிஐ விசாரணை தொடங்கியபோது, மருத்துவர் சுதிர் குப்தா தலைமையிலான ஏழு பேர் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, சுஷாந்தின் உடற்கூராய்வை மறுமதிப்பீடு செய்தது.

ஆனால், இதன் முடிவில் சுஷாந்தின் மரணம் தற்கொலையே எனக் கூறப்பட்டது. “தூக்கில் தொங்கியதைத் தவிர உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இறந்தவரின் உடல் மற்றும் உடைகளில் போராட்டத்திற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை,” என்று சுதிர் குப்தா தெரிவித்தார்.

இந்த சிபிஐ விசாரணையில் உடற்கூராய்வில் ஈடுபட்ட கூப்பர் மருத்துவமனை மருத்துவர்களும் விசாரிக்கப்பட்டனர். எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ முடித்து விட்டதாக சில தகவல்கள் பரவின.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக 2020, ஒக்டோபர் 15 அன்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஆர்.கே. கெளர், “ராஜ்புத் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சிபிஐ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக ஊடகங்களில் சில ஊகச் செய்திகள் வந்துள்ளன. இந்த அறிக்கைகள் யூகமானவை மற்றும் பிழையானவை என்பதை மீண்டும் வலியுறுத்தலாம்,” என்று கூறினார்.

சமீபகாலமாக இந்த வழக்கு தொடர்பாக பெரிதும் பேசப்படாமல் இருந்த நிலையில், கூப்பர் மருத்துவமனை ஊழியரின் இந்த புதிய கருத்துக்கள் மீண்டும் இவ்விவகாரத்தை விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சுஷாந்த் மரணம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளும் அதைப்பற்றிய விசாரணைகளும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரை தொடர்கதையாகவே இருக்கின்றன.

நன்றி தமிழன்

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...