அமெரிக்காவிலும் கனடாவிலும் சிலர் Hepatitis A என்ற கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டதை அடுத்து அதற்கும் இரசாயனக் கலப்பற்ற ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் 17 பேரும் கனடாவில் 10 பேரும் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் FreshKampo அல்லது HEB என்ற பெயரின்கீழ் மார்ச் 5 முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரை விற்கப்பட்டன.
அவற்றை வாங்கி உறைய வைத்தவர்கள் அதை உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.