20,000 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் தங்கள் படிப்புகளை நடத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மானியங்களைப் பெறுவார்கள்.
இந்த வருடத்திற்காக செலவிடப்பட்ட தொகை 485.5 மில்லியன் டாலர்கள்.
கல்வித் துறையில் 4,036 பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், செவிலியர் படிப்பில் 2,600 மாணவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத்தில் 2,275 மாணவர்களுக்கும், சுகாதார தொழில்முறைப் படிப்புகளில் 2,740 மாணவர்களுக்கும், பொறியியல் துறையில் 1,738 மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு உள்ளது.
மீதமுள்ள ஒதுக்கீடு, பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள பல துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொலைதூர மற்றும் பிராந்திய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பழங்குடியின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.