Sportsரிஷப் பண்ட் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது - வெளியான புதிய...

ரிஷப் பண்ட் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது – வெளியான புதிய தகவல்

-

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் காப்பாளருமான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் மாநிலத்தில் விபத்தில் சிக்கினார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து காரில் சென்றார். மங்லெளர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் வீதி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். விபத்தை நேரில் பார்த்த அரசு பஸ் சாரதி, நடத்துனர் அவரை மீட்டு ரூர்கியில் உள்ள மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நெற்றி பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்துக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பண்டின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான கார் முழுமையாக தீப்பிடித்து உருக்குலைந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனி அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் மேலதிக சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டு உள்ளார். டேராடூனில் இருந்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து உக்ரைனுக்கு மற்றொரு $100 மில்லியன் இராணுவ உதவிப் பொதி

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை அறிவித்துள்ளது. துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைனுக்கு ஒரு குறுகிய பயணத்தின் போது...

அதிக வரி விகிதம் கொண்ட வளர்ந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும்

கடந்த ஆண்டு வரி உயர்வால் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிக வரி விதிக்கும்...

பிரசவத்திற்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த மருத்துவமனைகள் பற்றிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் சராசரி டெலிவரிக்கு குறைந்தபட்சம் $726 செலவாகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரசவத்திற்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் சிறந்ததா என 1000 பெண்களிடம் ஃபைண்டர்...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

சுட்டுக் கொல்லப்பட்ட Tiktok நட்சத்திரம்

ஈராக் சமூக ஊடக ஆர்வலரான ஓம் ஃபஹத் என்ற இளம் பெண் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈராக் உள்துறை அமைச்சகம் ஒரு...