அமேசன் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக ட்விட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் பணி நீக்கம் செய்தனர்.
இவர்கள் வரிசையில் அமேசன் நிறுவனமும் கடந்தாண்டு நவம்பர் மாதமே 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில், அமேசனின் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு இன்று காலை அனுப்பிய செய்தியில்,
தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. இதனால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பணிநீக்கமானது இந்தாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கமானது அமேசன் வரலாற்றிலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
புத்தாண்டு பரிசை எதிர்பார்த்த ஊழியர்களுக்கு, ஆண்டின் முதல் வாரத்திலேயே அதிர்ச்சி அளித்துள்ளது அமேசன் நிறுவனம்.
நன்றி தமிழன்