பழங்குடியின மக்கள் மீதான வாக்கெடுப்பு நிச்சயம் தோற்கடிக்கப்படும் என மத்திய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் எந்தவித திட்டமிடலும் இன்றி உரிய பிரேரணையை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழங்குடியின மக்களுக்கு கூட்டாட்சி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்கும் நோக்கில் பிரதமர் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேவையான உண்மைகளை உள்ளடக்கவில்லை என்று தேசிய கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் வாக்கெடுப்பு தொடர்பாக 15 கேள்விகளை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.