அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் ஆறு வயது சிறுவனின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசிரியரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (06) ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவர் பொலிஸ் காவலில் உள்ளதாகவும், இந்த துப்பாக்கி பிரயோகமானது தவறுதலாக நடந்தது அல்லவெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
சிறுவனுக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
நன்றி தமிழன்