மேற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பார்வையிட்டார்.
குறித்த பிரதேச மக்களுக்கு விசேட நிவாரணப் பொதிகள் மூலம் உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதிகள் பாதிக்கப்படும் மோசமான வெள்ள நிலை இதுவாகும் என்று கூறப்படுகிறது.
வீடுகள் – வணிக வளாகங்கள் – விவசாய நிலங்கள் என ஒவ்வொரு துறைக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
வானிலை அறிக்கைகளின்படி, டிசம்பர் 30 முதல் மேற்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் 500 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.