Cinemaஒஸ்கர் விருதுக்கு 5 இந்திய திரைப்படங்கள்!

ஒஸ்கர் விருதுக்கு 5 இந்திய திரைப்படங்கள்!

-

95வது ஒஸ்கர் விருதுகளில் சிறந்த படத்திற்கான பரிசீலனைக்காக தேர்வு செய்யப்பட்ட 301 படங்களில் இந்தியத் திரைப்படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இடம்பிடித்துள்ளது. தி காஷ்மீர் பைல்ஸுடன், இந்தப் பட்டியலில் மேலும் நான்கு இந்தியப் படங்களும் உள்ளன.

‘அவதார்: தி வே ஒப் வாட்டர்’, ‘பிளாக் பெந்தர்: வகாண்டா பொரெவர்’ மற்றும் அதிக வசூல் செய்த ‘ஒப்டர்சன்’ ஆகிய ஹொலிவுட் படங்களும் இடம்பெற்றுள்ளன.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது படம் ஒ ஒஸ்கர் விருதுகளுக்கான முதல் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக செய்தியை பகிர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவுக்கு இது ஒரு பெரிய செய்தி என்று கூறிய அவர். பல்லவி ஜோஷி, அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் ‘சிறந்த நடிகர்’ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கந்தாரா’, ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘செல்லோ ஷோ’ ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள மற்ற இந்தியப் படங்களாகும். ஒஸ்கார் விருதுக்கான தேர்வு நடைபெற்று வந்தாலும் இந்த இந்தியத் திரைப்படங்கள் மிகவும் மதிப்புமிக்க விருதுகளுக்கான போட்டியில் இன்னும் உள்ளன.

Latest news

விக்டோரியாவில் கட்டுப்பாட்டை இழந்த காட்டுத்தீ – பொதுமக்களுக்கு சிவப்பு அறிவிப்பு

விக்டோரியாவில் வசிப்பவர்கள் கிறிஸ்துமஸ் தினத்திலும், Boxing Day தினத்திலும் கடுமையான காட்டுத் தீயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிராமியன்ஸ் தேசிய பூங்கா பகுதியில்...

அதிக விடுமுறைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

2025 ஆம் ஆண்டில், உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளன. CN டிராவலர் வழங்கிய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகில்...

விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

தெற்கு பிரேசிலில் உள்ள கிராமடோ நகரில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தின் பைலட்டாக இருந்த பிரேசில் தொழிலதிபர் லூயிஸ்...

ஆஸ்திரேலியாவில் Protection Visa மோசடி செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

Protection Visa (Subclass 866) தொடர்பாக ஆஸ்திரேலியாவில் மோசடி செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் மீண்டும்...

ஆஸ்திரேலியாவில் ஆங்கில ஊடகங்களை மறுக்கும் இந்திய அணி

ஆஸ்திரேலிய ஊடகங்களை இந்திய கிரிக்கெட் அணி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை தினமான ஊடகவியலாளர் சந்திப்பின் போது ரவி ஜடேஜா ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு...

இரண்டாவது கட்டமாக லாட்டரி மூலம் 3,000 பேருக்கு ஆஸ்திரேலியா PR வழங்க ஆரம்பம்

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான லாட்டரி அடிப்படையிலான விசா வகையான Pacific Engagement Visaவின் இரண்டாம் கட்டம் ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற உள்ளது. அதன்படி,...