பழங்குடி மக்கள், அகதிகள் மற்றும் காலநிலை மாற்ற ஆர்வலர்களை தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் சாதனை குறையும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.
இந்த நாட்டில் கணிசமான வீதமான, குறிப்பாக 29 சதவீதமான பழங்குடியின மக்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, நாட்டின் நற்பெயருக்கு கேடு விளைவிப்பதாக அண்மையில் இவர்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
மொத்த ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் பழங்குடி மக்கள் மிகக் குறைந்த 03 சதவீதத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
14 வயதுக்கு மேற்பட்ட சிறார் குற்றங்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகிறது.
2021 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய சிறைகளில் இறந்த பழங்குடி கைதிகளின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. ஆனால் 2022 இல் அது 17 ஆக உயர்ந்துள்ளது.
இதுவும் ஒரு பாரதூரமான நிலைதான் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது.