2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைனில் இயக்க ஆஸ்திரேலியா மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், கடினமான அல்லது பிராந்திய பிரதேசங்களில் வாழும் பெருமளவிலான மக்கள், இதனால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் 11 சதவீதம் பேருக்கு இன்னும் இணைய வசதி இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மொத்த மக்கள் தொகையான 25 மில்லியன் பேரில் கிட்டத்தட்ட 28 லட்சம் பேருக்கு இணைய வசதி இல்லை அல்லது இணையத்தை எப்படி பயன்படுத்துவது என்று புரியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இணைய வங்கிச் சேவை போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இணைய வசதிகள் இல்லாததால் காட்டுத் தீ அல்லது பேரிடர் காலங்களில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் கூறியுள்ளனர்.