தென்மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு விடுக்கப்பட்ட காட்டுத்தீ எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து தொடர்வதாக அனர்த்த நிவாரண முகவர் நிலையங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு நேற்று காட்டுத்தீ எச்சரிக்கையை விடுத்தது, மாநிலத்தில் பல பகுதிகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டன.
ஏறக்குறைய ஒரு வாரமாக தொடரும் இந்த காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 6,000 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.
100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.