நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி அவரது 87 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் நேற்று புதன்கிழமை இரவு காலமானார்.
‘என் தங்கை கல்யாணி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான நாய் சேகர் திரைப்படம் மூலம் ஹிரோவாக மீண்டும் என்ட்ரி கொடுத்தார் வடிவேலு.
இந்நிலையில், மதுரை வீரகனூரில் வசித்து வந்த வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கின்ற பாப்பா வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, வடிவேலு தாயாரின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நன்றி தமிழன்