Cinemaவிஜய்க்கு மகளாகும் இலங்கை பிக்பொஸ் பிரபலம்!

விஜய்க்கு மகளாகும் இலங்கை பிக்பொஸ் பிரபலம்!

-

வாரிசு படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாரிசு படத்திற்காக இதுநாள் வரை படத்தின் அப்டேட் வெளியிடாமல் இருந்து வந்த லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இனி ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vijay’s daughter is Sri Lankan Big Boss celebrity Janany

தற்போது பிக்பொஸ் பாகம் 6 நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கையை சேர்ந்த ஜனனியும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம். படத்தில் இவர் விஜய்யின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்கிறார் ஜனனி.

ஏற்கனவே பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லொஸ்லியா தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் வழியில் இப்போது ஜனனியும் தமிழ் படங்களில் நடிக்க களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்

வரும் நாட்களில் அடிலெய்டு, சிட்னி, மெல்போர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளுக்கு வெப்பமான வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அடிலெய்டைச் சுற்றியுள்ள வெப்பநிலை 30 டிகிரி...

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மேலும் அதிகரிக்கும் நீரில் மூழ்கி இறக்கும் போக்கு

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஆஸ்திரேலியாவில் ஐந்தாவது நீரில் மூழ்கி மரணம் பதிவாகியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று அடித்துச்...

Werribee-இல் பிறந்த சிங்கக் குட்டிக்கு ஏற்பட்ட சோகம்

விக்டோரியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் பிறந்த சிங்கக் குட்டி இறந்ததாக கூறப்படுகிறது. 'பிரீசியஸ்' என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக...

வேட்டையாட சென்ற இடத்தில் விபரிதம் – தந்தையை சுட்ட மகன்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய டேபிள்லேண்ட்ஸில் வேட்டையாடச் சென்றிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 70 வயதான தந்தையும் 47 வயது மகனும் இன்று காலை வேட்டையாடிக் கொண்டிருந்ததாக...

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

மெல்பேர்ணில் காணாமல் போன குழந்தை

விக்டோரியாவில் உள்ள டான்டெனாங் மலைத்தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் மெல்போர்னில் உள்ள ஒலிண்டா பிளேஸ்பேஸில் விளையாடிக்...